2013-02-14 16:26:48

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பெயரில் நடைபெற்ற துயர்துடைக்கும் பணிகள் குறித்து Missioவின் அறிக்கை


பிப்.14,2013. திருத்தந்தை தலைமைப் பொறுப்பை ஏற்றபோது அவருக்கு வயது 78 ஆக இருந்தாலும், எதிர்பார்ப்புக்களையெல்லாம் தாண்டி, அவர் இத்தாலியிலும், உலகின் பல நாடுகளிலும் 30 அப்போஸ்தலிக்கப் பயணங்களை மேற்கொண்டது வியப்பைத் தருகிறது என்று Missio கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆற்றிவந்த பணிகளைப் பற்றியும், சிறப்பாக, அவர் பெயரில் நடைபெற்ற துயர்துடைக்கும் பணிகள் குறித்தும் Missio மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன.
திருஅவையின் உலகளாவிய பிறரன்புப் பணிகளுக்கெனச் செயல்படும் Missio வழியாக, திருத்தந்தையின் பெயரால், 160 கோடி டாலர்கள், அதாவது, 8000 கோடி ரூபாய் அளவுக்கு உதவிகள் கடந்த ஏழு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன.
மறைபரப்பு ஞாயிறுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்திகளைக் குறிப்பிடும் இவ்வறிக்கை, மறைபணியில் ஈடுபடுவதென்பது தேவையில் உள்ள வறியோருக்குச் சிறப்பாகப் பணியாற்றுவது என்பதே திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மையக் கருத்தாக இருந்துவந்துள்ளது என்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.