2013-02-12 16:15:32

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவி விலகல் அறிவிப்பு, உலகின் தலைவர்கள் அதிர்ச்சி


பிப்.12,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது பதவி விலகலை அறிவித்ததைக் கேட்டு ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா, அமெரிக்கா என அனைத்துக் கண்டங்களின் சமய மற்றும் அரசியல் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
85 வயதாகும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் நலவாழ்வுக்காகச் செபிப்பதாக உரைத்துள்ள கத்தோலிக்கத் தலைவர்கள், அவர் திருஅவைக்கு ஆற்றியுள்ள மகத்தான பணிகளைப் பாராட்டியுள்ளனர்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருஅவை மீது கொண்டிருக்கும் அன்பே அவர் இந்த முடிவை எடுக்க முக்கிய காரணமாக இருக்கின்றது எனவும் உலகின் கத்தோலிக்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
திருஅவை சந்திக்கும் சவால்களையும், அத்திருஅவையை வழிநடத்தவும், நற்செய்தியை அறிவிக்கவும் உடலும் மனமும் வலிமையோடு இருக்க வேண்டியது அவசியம் என்பதையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நன்றாக அறிந்து வைத்துள்ளார் என்றுரைத்த இங்கிலாந்து பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ், அவரின் துணிச்சலுக்கும் இந்தத் தீர்மானத்துக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இது விசுவாசத்தின் தீர்மானம் என்று ஹொண்டூராஸ் கர்தினால் Oscar Rodriguez Maradiaga கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.