2013-02-11 17:02:13

கர்தினால் ஃபிலோனி வேளாங்கண்ணியில் கந்தமால் கிறிஸ்தவர்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார்


பிப்.11,2013. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டில் இடம்பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு மத்தியில், தங்களது விசுவாசத்தைக் காத்த கிறிஸ்தவர்களின் வரலாறுகள் அடங்கிய புத்தகத்தை வேளாங்கண்ணியில் வெளியிட்டார் கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி
CCBI என்ற இந்திய இலத்தீன்முறை ஆயர்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் வெள்ளிவிழா நிகழ்வில் இஞ்ஞாயிறன்று இப்புத்தகத்தை வெளியிட்டார் திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் பிலோனி.
120க்கும் மேற்பட்ட ஆயர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் பேசிய கர்தினால் டெலஸ்போர் டோப்போ, இப்புத்தகம் இறைவாக்குத்தன்மை கொண்டது மற்றும் இது மக்கள் விசுவாசத்தில் வளர உதவும் எனக் கூறினார்.
276 பக்கங்கள் கொண்ட 21ம் நூற்றாண்டின் முதல் கிறிஸ்தவர்கள் என்ற தலைப்பிலான இப்புத்தகம் நிருபர் Anto Akkara என்பவரால் தயாரிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.