2013-02-09 14:52:11

பிப்.10, கற்றனைத் தூறும் டெனிம் ஜீன்ஸ்(Denim Jeans)


1850களில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தங்கவேட்டை ஆரம்பமானபோது, Levi Strauss என்ற வியாபாரியும், Jacob Davis என்ற தையல் கலைஞரும் இணைந்து, கடினமான கூடாரத் துணியால் ஆன கால்சட்டைகளை உருவாக்கி விற்பனை செய்தனர். தங்க வேட்டையில் ஈடுபட்டோர் விரும்பித் தேர்ந்த ஓர் ஆடையாக இந்த கால்சட்டைகள் மாறின.
இத்தாலியின் Genoa என்ற இடத்தில் இவ்வகைத் துணிகள் முதன் முறையாக உருவானது. 'Genoa' என்ற சொல் பிரெஞ்ச் மொழியில், Gênes என்று அழைக்கப்பட்டதால், அதுவே இந்தக் கால் சட்டையின் பெயராகி, இன்று Jeans கால்சட்டைகள் இளையோரை அடையாளம் காட்டும் ஓர் உடையாக மாறிவிட்டது. அதேபோல், பிரான்ஸ் நாட்டின் Nimes என்ற இடத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தனிரகத் துணியை Levi Strauss அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்தார். Serge de Nimes என்று அழைக்கப்பட்ட இத்துணியே, 'Denim' என்று மாற்றம் பெற்றது.
தங்கவேட்டைத் தொழிலாளிகளும், Cowboys என்றழைக்கப்படும், மாடு மேய்க்கும் தொழிலாளிகளும் அணிந்து வந்த இந்தக் கால்சட்டை, 1955ம் ஆண்டு James Dean என்ற புகழ்பெற்ற நடிகர் நடித்த Rebel Without A Cause என்ற திரைப்படத்தின் மூலம் இளையோரின் ஓர் அடையாள ஆடையாக மாறியது. 2007ம் ஆண்டு வெளிவந்த ஒரு தகவலின்படி, உலகெங்கும் Denim Jeansன் விற்பனை 51.6 பில்லியன் டாலர்கள், அதாவது, 2,58,000 கோடி ரூபாய். Jeans கால்சட்டைகள் அதிகமாக உற்பத்தியாகும் நாடுகள் - சீனா, இந்தியா மற்றும் பங்களாதேஷ்.







All the contents on this site are copyrighted ©.