2013-02-08 15:37:27

பிப்.09, 2013. கற்றனைத்தூறும்..... தேன்


மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு, தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒருவகை திரவமே தேன்.
1 1/4 லிட்டர் பால் அல்லது 1 1/2 கிலோ மாமிசம் ஆகியவற்றில் நாம் பெறக்கூடிய சத்துப்பொருட்களுக்கு இணையான சத்துப்பொருள்கள் 200 கிராம் தேனில் உள்ளன.
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் தேனைப் பருகலாம். நோயுற்றோரும் பருகலாம். பிணி தீர்க்கும் மருந்துதான் தேன். பழங்காலத்தில் மூலிகை மருத்துவத்தில் தேனையே அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர்.
தேன் சாப்பிடுவதால் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. குடல்புண்கள், காய்ச்சல், இருமல், இருதய நோய்கள் போன்றவை குணமடைகின்றன. மேலும், ஜீரணமின்மை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு இது அருமருந்தாகும். வயிற்றைச் சுத்தப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் மூட்டு வலியைப் போக்குகிறது. மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனைக் கலந்து சாப்பிடும்போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளைத் தடுத்து நிறுத்திவிடும். தேனில் சர்க்கரைச் சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர், அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம். இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும்.
ஒரு கிலோ தேனுக்கு ஆறு இலட்சத்து அறுபத்தெட்டாயிரம் பூக்களை தேனீக்கள் சந்திக்கின்றன. ஒரு சொட்டுத் தேனைச் சேகரிக்க தேனீக்கள் பதினாறு மைல்தூரம் கூட பறந்து செல்கின்றன.








All the contents on this site are copyrighted ©.