2013-02-08 15:58:21

Asia Bibiக்கு மன்னிப்பு வழங்கப்படுமாறு கர்தினால் Etchegaray வேண்டுகோள்


பிப்.08,2013. பாகிஸ்தானில், தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள Asia Bibi என்ற கிறிஸ்தவப் பெண்ணுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுமாறு அந்நாட்டு அரசுத்தலைவர் Asif Ali Zardariக்கு கடிதம் அனுப்பியுள்ளார் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்.
Asia Bibiக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து அரசுத்தலைவர் Zardariக்கு கடிதம் அனுப்பியுள்ள கர்தினால்கள் அவையின் உதவித் தலைவர் கர்தினால் Roger Etchegaray, இப்பெண்ணுக்கு மன்னிப்பு அளிப்பது மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மன்னிப்பு நடவடிக்கை, முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உரையாடலையும் ஒப்புரவையும் பெருமளவில் ஊக்குவிக்கும் என்றும் கர்தினாலின் கடிதம் கூறுகிறது.
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் முன்னாள் தலைவரான கர்தினால் Roger Etchegaray, கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சகோதரர்களாக வாழ்வதற்குத் தான் எப்பொழுதும் பணி செய்ததாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டில், தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையிலிருக்கும் 42 வயதான Asia Bibi ஐந்து பிள்ளைகளுக்குத் தாய் ஆவார்.








All the contents on this site are copyrighted ©.