2013-02-05 16:14:27

சுற்றுச்சூழல் மாசுக்கேட்டைக் குறைக்கும் வழிகள் குறித்து ஆசிய நாடுகள் கலந்துரையாடல்


பிப்.05,2013. ஆசிய-பசிபிக் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுக்கேட்டைக் குறைக்கும் வழிகள் குறித்த செயல்திட்ட நடவடிக்கைகளை 19 ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் விவாதித்து வருகின்றனர்.
UNEP என்ற ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில், SLCP எனப்படும் சுற்றுச்சூழலில் சிறிது காலமே தங்கும் கருப்பு கார்பன், மீத்தேன், HFC என்ற ஓசோன் வாயு மண்டலத்தைத் தாக்கும் ஹைட்ரஜன், ப்ளோரின், கார்பன் ஆகியவைகளின் கலவையான hydrofluorocarbons போன்றவற்றைக் குறைப்பது குறித்து பேசப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலில் சிறிது காலமே தங்கி பாதிப்பு ஏற்படுத்தும் இவற்றை 2030ம் ஆண்டுக்குள் குறைக்கும் ஐ.நா.வின் திட்டம் நிறைவேறினால் 20 இலட்சம் குழந்தை இறப்புக்களையும், அறுவடையில் ஆண்டுதோறும் ஏற்படும் 3 கோடி டன்களுக்கு மேற்பட்ட இழப்பையும் தடுக்க முடியும் என்று, UNEP அமைப்பு 2011ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
அத்துடன், உலகம் வெப்பமாகி வருவதையும் 2050ம் ஆண்டுக்குள் குறைக்க முடியும் என்றும் UNEP அமைப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.