2013-02-05 16:13:05

உலகின் மிகப்பெரிய அன்னைமரியா திருவுருவம்


பிப்.05,2013. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உலகின் மிகப்பெரிய அன்னைமரியா திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.
பொலிவியா நாட்டின் Oruro நகரில் Socavon அன்னைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருவுருவம், அந்நாட்டினர் மரபுகளை உறுதிப்படுத்தும் விசுவாசத்தின் செயலாக இருக்கின்றது என்று, இத்திருவுருவத்தை அமைத்த கலைஞர் ரொலாண்டோ ரோக்கா கூறினார்.
La Pazவுக்குத் தெற்கிலுள்ள 12 ஆயிரம் அடி உயரமான மலையில் 149 அடி உயரமான அன்னைமரியா திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. 12 இலட்சம் டாலர் செலவில் எழுப்பப்பட்டுள்ள இந்த அன்னைமரியா திருவுருவம், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள கிறிஸ்து மீட்பர் திருவுருவத்தைவிட 22 அடி உயரமானதாகும்.
Socavon அன்னைமரியா, சுரங்கத்தொழிலாளர்களுக்குப் பாதுகாவலியாகப் போற்றப்படுகிறார்.







All the contents on this site are copyrighted ©.