2013-02-04 15:39:05

திருத்தந்தையின் மூவேளை செப உரை


பிப்.04,2013. வாழ்வுக்கும், குடும்பத்திற்கும் நமது நேரத்தையும் சக்தியையும் அளிப்பதே இன்றைய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான மிகச்சிறந்த பதிலுரையாக இருக்கமுடியும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலியில் இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்பட்ட வாழ்வுக்கான நாள் குறித்து தன் ஞாயிறு மூவேளை செப உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரும் மாண்புடன் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை உறுதிசெய்யும் இடமாக ஐரோப்பா விளங்கவேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார்.
வாழ்வு கலாச்சரத்திற்காக உழைக்குமாறு நல ஆதரவுப் பணியாளர்களுக்குத் தான் ஊக்கமளிப்பதக்கவும் திருத்தந்தை எடுத்துரைத்தார். இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் துவக்கத்தில், 'இயேசுவே அன்பின் இறைவாகினர் அவர் உண்மைக்கு சான்று பகர வந்தார்' என்பதை மையக்கருத்தாக வைத்து உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவே அன்பின் இறைவாக்கினர், ஆனால் அன்பிற்கென்று தனி உண்மைகள் உள்ளன என்றார்.
ஒரே உண்மைத்தன்மையின் இரு பெயர்களே அன்பும் உண்மையும், அவையே இறைவனின் இரு பெயர்கள் என மேலும் கூறினார் திருத்தந்தை.
அன்பு பொறுமையுள்ளது, நன்மை செய்யும், பொறாமைப்படாது, தற்புகழ்ச்சி கொள்ளாது, இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, எரிச்சலுக்கு இடம் கொடாது, தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது, மாறாக உண்மையில் அது மகிழும், என்ற தூய பவுலின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டி இவ்வார ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.