2013-02-02 15:36:42

வேளாங்கண்ணி திருத்தலத்தின் 50ம் ஆண்டு நிகழ்வு


பிப்.02,2013. தமிழகத்தின் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலம் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதன் 50ம் ஆண்டு மற்றும் இந்திய இலத்தீன்ரீதி ஆயர் பேரவை உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்குத் தனது பிரதிநிதியாக, கர்தினால் Fernando Filoni அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இம்மாதம் 9 முதல் 11 வரை நடைபெறவுள்ள விழா நிகழ்வுகளில், திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Filoni, திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான், வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்தை, 1962ம் ஆண்டில் மைனர் பசிலிக்கா என்ற நிலைக்கு உயர்த்தினார்.
மேலும், இம்மாதம் 11ம் தேதி ஜெர்மனியின் Altöttingல் சிறப்பிக்கப்படும் 21வது அனைத்துலக நோயாளர் தின நிகழ்வுகளில் திருத்தந்தையின் பிரதிநிதியாக, திருப்பீட நலவாழ்வுத் துறைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski கலந்து கொள்ளவுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.