2013-02-01 15:51:09

வத்திக்கான் நூலகத்திலுள்ள பழங்கால ஆவணங்கள் இணையதளத்தில்...


பிப்.01,2013. திருத்தந்தை 5ம் நிக்கோலாசால் 600க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட வத்திக்கான் நூலகத்தில், முதன்முதலில் சேகரிக்கப்பட்ட பழங்கால எழுத்துப் பிரதிகள் இணையதளத்தில் கிடைப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், வல்லுனர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் எனப் பலருக்கும் உதவும் நோக்கத்தில், டிஜிட்டலில் வடிவமைக்கப்பட்டுள்ள பழங்கால 256 ஆவணங்கள், இணையதளத்தில் கிடைப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் நூலகத் தலைவர் பேரருட்திரு Cesare Pasini அறிவித்தார்.
1451ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வத்திக்கான் நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் வசதிகள், Polonsky நிறுவனம், ஜெர்மனியின் Heidelberg பல்கலைக்கழகம் மற்றும் பிற உதவியாளர்கள் வழங்கிய 20 இலட்சம் பவுண்டு செலவில் செய்யப்பட்டுள்ளன.
வத்திக்கான் நூலகத்திலுள்ள பெருமளவிலான ஆவணங்கள் டிஜிட்டலில் வடிவமைக்கப்படுவதற்கு Heidelberg பல்கலைக்கழகம் முக்கிய காரணம் என்றும் பேரருட்திரு Pasini கூறினார்.







All the contents on this site are copyrighted ©.