2013-01-31 15:49:18

நோய் தடுப்பு மருந்துகளுடன் தகுந்த அளவு உணவைக் கொடுப்பதால் பல இலட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்கமுடியும்


சன.31,2013. நோய் தடுப்பு மருந்துகளுடன் (Antibiotics) தகுந்த அளவு உணவைக் கொடுப்பதால் பல இலட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்கமுடியும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
உணவு பற்றாக் குறையால் ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்; இவர்களில் பத்து இலட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்.
இந்த மரணங்களையும், உணவு பற்றாக் குறையால் வளர்ச்சி குன்றிய குழந்தைகளையும் குறித்து ஆப்ரிக்காவின் மாலி நாட்டில், வாஷிங்க்டன் பல்கலைக் கழகம், குழந்தைகளுக்குத் நோய் தடுப்பு மருந்து மட்டும் அளிப்பதால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
2767 குழந்தைகள் மத்தியில் 5 முதல் 6 மாதங்கள் வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் The New England Journal of Medicine என்ற மருத்துவ இதழில் இப்புதனன்று வெளியாயின.
இந்த ஆய்வின் விவரங்களை, ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனமான WHO பயன்படுத்தவிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.