2013-01-31 15:46:17

குழந்தை வளர்ப்பையும், திருமண உறவையும் பிரிப்பதற்கு பிரித்தானிய அரசு மேற்கொள்ளும் முயற்சி ஆபத்தானது - இங்கிலாந்து ஆயர்கள்


சன.31,2013. குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்ற உண்மைக்குப் புறம்பாக, பாலியல் உறவுகளை உறுதி செய்யும் அமைப்புக்கள் உலகில் இருப்பதற்கு அர்த்தமில்லை என்று இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டமாக்கும் வகையில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்விவாதங்களில் பங்கேற்கும் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிய ஆயர்கள், குழந்தை வளர்ப்பையும், திருமண உறவையும் பிரிப்பதற்கு பிரித்தானிய அரசு மேற்கொள்ளும் முயற்சி ஆபத்தானது என்று கூறினர்.
குடும்பத்தின் அடிப்படை இலக்கணத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, பிரித்தானிய மக்களில் பெரும்பான்மையானவர்கள் விரும்பாதபோது, அரசு இம்முயற்சியை மேற்கொள்வது நாட்டின் சட்ட வரைவு முறைகளுக்கு எதிரானது என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
இவ்வகை சட்ட மாற்றம் தேவையா என்ற கேள்வியை மக்கள் முன் வைக்காத அரசு, இச்சட்டத்தை எவ்வகையில் மாற்றலாம் என்ற கேள்வியை மட்டும் மக்கள் முன் வைப்பது அடிப்படையில் தவறான செயல்முறை என்றும் ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.