2013-01-30 15:58:20

மகாராஷ்டிரா மாநிலக் கிறிஸ்தவர்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் - மதசார்பற்ற கத்தோலிக்க அமைப்பு வேண்டுகோள்


சன.30,2013. மகாராஷ்டிரா மாநிலத்தின் Sindhudurg பகுதியில் இந்து அடிப்படைவாத குழுக்களின் வன்முறைகள் பரவி வருவதால், அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்கு மாநில அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று மதசார்பற்ற கத்தோலிக்க அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இம்மாதத்தில் Sawantwadi என்ற இடத்தில் கிறிஸ்தவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 600க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் மீது இந்து அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தி, வழிபாட்டை நிறுத்தினர்.
இந்நிகழ்வையடுத்து, மதசார்பற்ற கத்தோலிக்க அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஜோசப் டயஸ், மாநில முதல்வர் Prithviraj Chavanக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நடைபெற்ற வன்முறையைக் குறித்து அரசு தீர ஆய்வு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிராக, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ள பல வன்முறைகளில் காவல்துறையினர் செயலற்று நின்றதையும், ஒரு சில இடங்களில் வன்முறையாளர்களுக்கு உதவிகள் செய்ததையும் இம்மடல் சுட்டிக்காட்டியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.