2013-01-29 15:52:44

சாம்பியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படுவது அதிர்ச்சியூட்டும் விதத்தில் மோசமடைந்து வருகின்றது, ஆயர்கள் கவலை


சன.29,2013. சாம்பியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படுவதும், அவை பாதுகாக்கப்படுவதும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் மோசமடைந்து வருகின்றதென அந்நாட்டு ஆயர்கள் தங்களது மேய்ப்புப்பணி அறிக்கையில் கூறியுள்ளனர்.
அரசு அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை, தங்களது விருப்பம்போல் பயன்படுத்துவதும், அரசுக்கு எதிராகப் பேசும் தலைவர்களும் தனிமனிதரும் கைது செய்யப்படும் அளவுக்கு அச்சுறுத்தப்படுவதும், கேள்விகளால் நச்சரிக்கப்படுவதுமே நாட்டின் இந்நிலைக்குக் காரணம் என ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
மறையுரைகளில் அரசை விமர்சிக்கும் கத்தோலிக்கக் குருக்களும்கூட அச்சுறுத்தப்படுகின்றனர் எனவும் கூறும் ஆயர்களின் அறிக்கை, ஒவ்வொருவரும் தங்களின் கடவுளின் முன்பாக நீதியுடன் செயல்படுவதும், தாழ்மையுடன் நடந்து கொள்வதும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் எனவும் பரிந்துரைக்கின்றது.







All the contents on this site are copyrighted ©.