2013-01-29 15:44:26

குவாத்தமாலாவில் நிதி நெருக்கடியைவிட உணவு நெருக்கடி மிகவும் கடுமையாக இருக்கின்றது, ஆயர்கள் எச்சரிக்கை


சன.29,2013. குவாத்தமாலாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி, ஒருமைப்பாட்டுணர்வு, நிலைகுலையாத்தன்மை ஆகியவற்றை அடைவதற்கு வளர்ச்சியில் புதிய யுக்தியும், பொருளாதாரத்தில் புதிய கண்ணோட்டமும் அவசியம் என்று அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
இவற்றை எட்டுவதற்கு அரசு தேசிய அளவில் நீண்ட மற்றும் குறுகிய காலத் திட்டங்களை, குறிப்பாக, இளையோருக்கும் சிறாருக்கும் பயனளிக்கும் திட்டங்களை அமைக்க வேண்டுமென்றும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் குவாத்தமாலா நகரத்தில் கடந்த வாரத்தில் ஆண்டுக் கூட்டத்தை நிறைவு செய்து அறிக்கை வெளியிட்ட ஆயர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
புதிய பொருளாதார, வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதற்கு, நாட்டின் புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களைச் சுரண்டுவதை நிர்வகிக்கும் சட்டங்களில் மாற்றங்கள் தேவை என்றும் ஆயர்களின் அறிக்கை பரிந்துரைக்கின்றது.







All the contents on this site are copyrighted ©.