2013-01-26 16:24:36

2013ம் ஆண்டில் துன்புறும் சிறார்க்கென 140 கோடி டாலர் தேவைப்படுகின்றது, யுனிசெப்


சன.26,2013. உலகின் 45 நாடுகள் மற்றும் பகுதிகளில் இவ்வாண்டில் போர்கள், இயற்கைப் பேரிடர்கள் மற்றும்பிற நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறாரின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏறத்தாழ 140 கோடி டாலர் தேவைப்படுகின்றது என, ஐ.நா.வின் யூனிசெப் நிறுவனம் கூறியுள்ளது.
2013ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் இருக்கின்றோம், இப்போதே சிரியாவில் இலட்சக்கணக்கான சிறார் கடும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர் மற்றும் அண்டை நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்றுள்ளனர் என்று யூனிசெப்பின் அவசரகாலத் திட்ட அலுவலக இயக்குனர் Ted Chaiban கூறினார்.
24 இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ள காங்கோ குடியரசில் பத்து இலட்சம் சிறார் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
சூடானின் Blue Nile மற்றும் South Kordofan மாநிலங்களில் புலம் பெயர்ந்துள்ள 2,10,000 மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சிறார் எனவும் Ted Chaiban கூறினார்








All the contents on this site are copyrighted ©.