2013-01-25 16:07:52

எருசலேம் முதுபெரும் தலைவர் : புதிய இஸ்ரேல் அரசு பாலஸ்தீனியர்களை மறக்கக்கூடாது


சன.25,2013. இஸ்ரேலில் புதிதாக ஆட்சி அமைக்கும் அரசு பாலஸ்தீனியர்களை மறக்கக் கூடாது என்று எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal கேட்டுக் கொண்டார்.
இஸ்ரேலில் இச்செவ்வாயன்று தேர்தல்கள் இடம்பெற்றுள்ளவேளை, பதவி விலகும் பிரதமர் Benjamin Netanyahu கட்சி, Yair Lapid கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தியிருப்பது, நாட்டின் முன்னேற்றத்துக்கு உண்மையிலே உதவும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார் முதுபெரும் தலைவர் Twal.
பாலஸ்தீனம் என்று அழைக்கப்படும் ஒரு நாடு இருக்கின்றது என்பதையும், பாலஸ்தீனிய மக்கள் என்ற ஒரு சமுதாயம் இருக்கின்றது என்பதையும் தேர்தலில் வெற்றிபெறும் இஸ்ரேல் அரசியல்வாதிகள் நினைவில் வைக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார் எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர்.
மேலும், ஜோர்டனில் நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சிரியாவில் சண்டைகள் நிறுத்தப்படுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.