2013-01-22 15:46:53

மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்பில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்


சன.22,2013. "பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் வரிசையில், இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக, பெங்களூரு மருத்துவர் அமலா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை ஒக்கூர் தனியார் தாதியர் கல்லூரியில் ‘பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய், மறைந்திருக்கும் உண்மைகள்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பெங்களூரு செயின்ட் ஜான் மருத்துவமனை புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் அமலா, பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோய்களின் வரிசையில் இந்தியா 2வது இடத்தைப் பிடிக்கிறது என்றார். குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களை இந்நோய் தாக்குகிறது என்ற அவர், குறைந்த வயதிலேயே வயதுக்கு வந்தோர், கால தாமதத்தில் கர்ப்பிணியானோர், மற்றும் குழந்தையில்லாத சிலரை இந்த நோய்த் தாக்குகிறது எனவும், நோயின் வீரியத்தால் நிணநீர் முடிச்சு, நுரையீரல், கல்லீரல் ஆகியவை பாதிக்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.