2013-01-17 15:57:44

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் முக்கியத்துவம் பற்றி கர்தினால் Kurt Koch


சன.17,2013. சனவரி 18, இவ்வெள்ளிக் கிழமை முதல் சனவரி 25, வருகிற வெள்ளியன்று கொண்டாடப்படும் புனித பவுலின் மனமாற்றம் திருநாள் முடிய கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் கொண்டாடப்படுகிறது.
Zenit கத்தோலிக்க நாளிதழுக்குப் பேட்டியளித்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வளர்ச்சி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch, இந்த ஒன்றிப்பு வாரத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
19ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த ஆவலை Anglican சபையினர் வெளியிட்டபோது, அதனை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை 13ம் லியோ இந்த ஒன்றிப்பு வாரத்தை ஒரு செப முயற்சியாகத் துவக்கினார் என்று கர்தினால் Koch தன பேட்டியில் விளக்கியுள்ளார்.
மத உரிமைகள் பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளியிட்ட கருத்துக்கள் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் அடிப்படை உரிமைகளையும் மதித்து வெளியிடப்பட்டது என்பதை உணரலாம் என்று கர்தினால் Koch சுட்டிக்காட்டினார்.
இன்றைய உலகில் மத உரிமைகளுக்காக துன்புறும் மக்களில் 80 விழுக்காட்டினருக்கும் அதிகமானவர்கள் கிறிஸ்தவர்களே என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் Koch, இச்சூழலில் கிறிஸ்தவ ஒன்றிப்பு இன்னும் அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.