2013-01-16 15:42:32

தெற்கு சூடானில் வேளாண்மையை வளர்க்கும் ஒரு புதிய முயற்சியில் FAO


சன.16,2013. FAO (Food and Agriculture Organisation) எனப்படும் ஐ.நா. அமைப்பும், பிரான்ஸ் அரசும் இணைந்து தெற்கு சூடானில் வேளாண்மையை வளர்க்கும் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
5 இலட்சம் யூரோக்கள் மதிப்பில் துவக்கப்பட்டுள்ள இந்த முயற்சியின் மூலம், தெற்கு சூடானின் அடிப்படை தானிய வகைகளை இன்னும் சிறந்த முறையில் பயிரிடும் வழிகள் அங்குள்ள விவசாயிகளுக்குச் சொல்லித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு, ஜூலை மாதம், சூடானில் இருந்து தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிந்ததிலிருந்து, இவ்விரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வந்தாலும், தெற்கு சூடான் வேளாண்மையில் தன்னிறைவு அடையும் வழிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருவது நம்பிக்கை அளிக்கும் ஓர் அடையாளம் என்று FAO அதிகாரி Sue Lautze கூறினார்.
இப்புதிய முயற்சியில் இளையோரை அதிக அளவில் ஈடுபடுத்துவே தங்கள் முதன்மையான குறிக்கோள் என்று FAOவின் மற்றொரு அதிகாரி Joseph Okidi கூறினார்.








All the contents on this site are copyrighted ©.