2013-01-15 15:50:50

சமூக ஆர்வலர் Lenin Raguvanshi : மகா கும்ப மேளா, தீவிரப்போக்கு மற்றும் வன்முறையின் காட்சி


சன.15,2013. இந்துக்களின் மிகப்பெரிய விழாவான மகா கும்ப மேளா, இலட்சக்கணக்கான மக்களின் புனித நேரமாக இருப்பதைவிட, வன்முறை மற்றும் தீவிரப்போக்கின் வெளிப்பாடாக இருக்கின்றது என, மனித உரிமைகள் குறித்த மக்கள் விழிப்புணர்வு கழக இயக்குனர் Lenin Raguvanshi கூறினார்.
இந்தியாவில் பல புத்தமதத்தினர் கொல்லப்படுவதற்குப் பொறுப்பானவர்கள் என்று சொல்லப்படும் நாகா சாதுக்களின் ஆயுத அணிவகுப்பு சாதி அமைப்பினால் அறிவிக்கப்பட்ட சமத்துவமின்மையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு இத்திருவிழா ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது என்றும் Lenin குறை கூறினார்.
அலகாபாத்தில் கும்ப மேளாத் திருவிழாவுக்கென 124 கிலோ கிராம் கஞ்சாவைக் கொண்டு சென்ற வாகனம் ஒன்றை இச்செவ்வாயன்று காவல்துறை கைப்பற்றியுள்ளது என்றும் லெனின் கூறினார்.
ஈட்டிகள், கம்புகள், கத்திகள், திரிசூலம் ஆகியவையே, Chowni எனப்படும் இராணுவ முகாம்களில் வாழும் நாகா சாதுக்களின் அடையாளங்கள் எனவும், சமயத் திருவிழாவான கும்ப மேளாவில் இந்தச் சாதுக்கள் வன்முறையால் தூண்டப்பட்ட இந்துத்துவத்தை அறிக்கையிடுகின்றனர் எனவும் லெனின் தெரிவித்தார்.
உலகில் மிகப்பெரிய அளவில் மக்கள் கூடும் இவ்விழாவில், இவ்வாண்டில் 10 கோடிக்கு மேற்பட்டவர்கள் பங்கு கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் மட்டும் 5 இலட்சத்துக்கும் மேலானோர் கங்கையில் புனித நீராடியுள்ளனர்.
மகர சங்கராந்தி நாள் துவங்கி, மகா சிவராத்திரிவரை, 55 நாட்களுக்கு இவ்விழா நடைபெறும்.
இந்தியாவின் புண்ணிய நதிகளாகக் கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் அருகே திரிவேணியில் சங்கமமாக ஒன்றிணைகின்றன. இந்தப் புண்ணியத் தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 'மகா கும்ப மேளா' திருவிழா நடைபெற்று வருகின்றது.








All the contents on this site are copyrighted ©.