2013-01-14 16:05:09

லாவோஸ் நாட்டில் கிறிஸ்தவக் குடும்பங்கள் திடீர் திடீரென காணாமல்போகின்றன


சன.14,2013. லாவோஸ் நாட்டில் கிறிஸ்தவக் குடும்பங்கள் திடீர் திடீரென காணாமல்போதல் அதிகரித்து வருவதாக அந்நாட்டிலுள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
லாவோசின் Luang Namtha மற்றும் Udomsay மாநிலங்களில் கிறிஸ்தவக் குடும்பங்கள் காணாமற்போதல் அதிகரித்துள்ளதாகக் கூறும் கிறிஸ்தவத் தலைவர்கள், அரசின் விசாரணைகளுக்கும் விளக்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த பிரச்சினையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக லாவோஸ் அரசுத்தலைவர் Choummaly Sayasoneக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது 'உலகளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாடு' என்ற அமைப்பு.
மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, லாவோஸ் நாட்டில் அண்மைக் காலங்களில் மத சுதந்திரம் குறித்தவைகளில் முன்னேற்றமும், மனச்சன்ன்று கைதிகளின் எண்ணிக்கை குறைவும் இடம்பெற்றுள்ள போதிலும், கிறிஸ்தவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாவோஸ் நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரிவினை சபை கிறிஸ்தவர்களும், ஏறத்தாழ 45,000 கத்தோலிக்கர்களும் வாழ்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.