2013-01-14 16:03:51

ஒரேபாலின திருமணத்தை எதிர்த்து பிரான்ஸில் பெரும் ஊர்வலம்


சன.14,2013. ஒருபாலின திருமணத்தை எதிர்த்து பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.
ஒரு பாலின உறவையும், ஒரே பாலினத் தம்பதியர் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வதையும் ஜூன் மாதத்தையொட்டி, பிரான்ஸில் சட்டபூர்வமாக்க, அந்நாட்டு அரசுத்தலைவர் பிரான்ஸுவா ஒலந்த் திட்டமிட்டு வருவதை எதிர்த்து, தலைநகர் பாரிஸுக்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், ஈஃபில் கோபுரத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.
தலத்திருஅவையும், வலதுசாரி அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கியிருந்த இந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் குடும்ப மதிப்பீடுகள் காக்கப்படுமாறு அழைப்புவிடுத்துச் சென்றனர்.







All the contents on this site are copyrighted ©.