2013-01-12 15:44:45

குடியேற்றதாரர்களுக்கு நாடுகளின் எல்லைகளை மூடுவது, தீர்வு அல்ல, கர்தினால் மரிய வேலியோ


சன.12,2013. குடியேற்றதாரர்களுக்கு நாடுகளின் எல்லைகளை மூடுவது, சட்டத்துக்குப் புறம்பே குடியேறுகின்றவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையாது என்று, திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர் அவைத் தலைவர் கர்தினால் அந்தோணியோ மரிய வேலியோ கூறினார்.
இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் 99வது கத்தோலிக்க அனைத்துலக குடியேற்றதாரர் தினத்தை முன்னிட்டு, லொசர்வாத்தோரே ரொமானோ என்ற திருப்பீடச்சார்பு தினத்தாளுக்குப் பேட்டியளித்துள்ள கர்தினால் மரிய வேலியோ இவ்வாறு கூறினார்.
கடும் சண்டை இடம்பெற்றுவரும் சிரியாவை விட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 5 இலட்சத்து 25 ஆயிரமாக இருந்தது, சிரியாவில் ஏற்கனவே நாற்பது இலட்சம் பேருக்கு உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் கூறினார் கர்தினால் மரிய வேலியோ.
குடியேற்றதாரர்களுக்கு நாடுகளின் எல்லைகளை மூடுவது, குடியேற்றதாரருக்கு எதிரானத் தீர்வைக் கொண்டுவரும், அத்துடன், மக்களைச் சட்டத்துக்குப் புறம்பே குடியேறுவதற்குத் தூண்டும் எனவும் கர்தினால் மரிய வேலியோ கூறினார்.







All the contents on this site are copyrighted ©.