2013-01-12 15:49:08

அருள்தந்தை Gazzola : குடியேற்றதாரர் விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு


சன.12,2013. 99வது கத்தோலிக்க அனைத்துலக குடியேற்றதாரர் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட ஸ்கலபிரினி துறவு சபையின் அதிபர் அருள்தந்தை Alessandro Gazzola, தனது இயல்பிலே மனித சமுதாயத்தின் தாயாக இருக்கும் திருஅவை, நம்பிக்கையிழந்த பலரின் வாழ்வுப் பாதையை மாற்றுவதற்கு ஒவ்வொரு நாளும் முயற்சித்து வருகிறது எனக் கூறினார்.
ஸ்கலபிரினி துறவு சபையினர், குடியேற்றதாரர்களின் மறைப்பணியாளர்கள் எனவும், கடந்த 125 ஆண்டுகளாக இச்சபை இம்மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து சேவை செய்து வருகின்றது எனவும் அருள்தந்தை Gazzola தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கணிப்புப்படி, இன்று உலகில் 21 கோடியே 40 இலட்சம் குடியேற்றதாரரும், ஏறக்குறைய 3 கோடியே 50 இலட்சம் அகத்கிளும் உள்ளனர், அதோடு, புகலிடம் தேடுவோரும், நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்தவர்களும் எண்ணிக்கையற்று இருக்கின்றனர் எனவும் அருள்தந்தை Gazzolaன் செய்தி கூறுகிறது.
குடியேற்றம் தொடர்புடைய பல விவகாரங்கள் இருக்கின்றன, திருஅவையும் திருஅவை நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு குடியேற்றதாரர் பிரச்சனைகளைக் களைவதற்கு முயற்சிக்குமாறு அவரின் செய்தி அழைப்பு விடுக்கிறது.







All the contents on this site are copyrighted ©.