ஆசியாவில் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள், ILO அறிக்கை
சன.11,2013. உலக அளவில், ஆசியாவிலே வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்
என்று, ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனம் இவ்வியாழனன்று வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது. ஆசிய-பசிபிக்
பகுதியில் வீட்டுவேலை செய்யும் 2 கோடியே 15 இலட்சம் தொழிலாளர்களில் மூன்று விழுக்காட்டினருக்கு
மட்டுமே, வாரத்தில் ஒருநாள் விடுமுறை கிடைக்கின்றது எனவும் ILO நிறுவன அறிக்கை கூறுகிறது. அதேபோல்,
மகப்பேறுகால விடுமுறைச் சலுகைகளும் ஆசியாவில் மோசமான நிலையில் உள்ளன எனக்கூறும் அவ்வறிக்கை,
12 விழுக்காட்டினரே இத்தகைய சலுகைகளை அனுபவிக்கின்றனர் எனவும் கூறியது. உலக அளவில்
வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள். ஆசியாவில் வீட்டுவேலை
செய்யும் தொழிலாளர்களில் 42 இலட்சம் பேர் இந்தியர்கள், 24 இலட்சம் பேர் இந்தோனேசியர்கள்
மற்றும் 19 இலட்சம் பேர் பிலிப்பீன்ஸ் நாட்டவர்.