2013-01-10 15:39:10

உலகப் புகழ்பெற்ற Louvre அருங்காட்சியகத்தின் மறு பிரதி அபு தாபியில் கட்டப்படுகிறது


சன.10,2013. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற Louvre அருங்காட்சியகத்தின் மறு பிரதி ஒன்று அபு தாபியில் கட்டப்படும் என்ற அறிக்கை இச்செவ்வாயன்று வெளியானது.
65 கோடியே 40 இலட்சம் டாலர்கள் மதிப்பில் உருவாக்கப்படும் இந்த அருங்காட்சியகம் 2015ம் ஆண்டு மக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படும்.
உலகப் புகழ்பெற்ற Louvre என்ற பெயரையே இந்த அருங்காட்சியகமும் முதல் 30 ஆண்டுகள் தாங்கி நிற்கும் என்றும், இதற்காக, Louvre அருங்காட்சியகத்திற்கு 130 கோடி டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.
Louvre என்ற பெயர் அபு தாபி நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு பிரான்ஸ் நாட்டின் அறிஞர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எண்ணெய் வள முதலாளிகளுக்கு பிரான்ஸ் தன் ஆன்மாவை விற்றுவிட்டதென்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
அபு தாபியில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஏழைகளின் உழைப்பு சுரண்டப்படும் என்றும், இத்தொழிலாளிகள் மிகக் குறைந்த ஊதியத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவர் என்றும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.