2013-01-08 15:06:10

கற்றனைத் தூறும் - “Happy Birthday” பாடல் பிறந்த கதை


உலகின் பல நாடுகளில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தவறாமல் ஒலிப்பது 'Happy Birthday' என்ற அழகிய பாடல். இப்பாடலின் வார்த்தைகள் பல மொழிகளில் இருந்தாலும், இதன் இசை உலகெங்கும் ஒரே விதமாக ஒலிக்கிறது. இப்பாடல் பிறந்த கதை இது.
Hill என்ற குடும்பத்தைச் சேர்ந்த Mildred, Patty என்ற சகோதரிகள் இருவரும் ஆசிரியர்கள். இவ்விருவரும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை வாழ்த்துவதற்கென்று “Good Morning to You” என்ற வார்த்தைகளுடன் துவங்கும் ஒரு பாடலை இயற்றினர். இப்பாடல், அப்பள்ளியில் மட்டுமல்லாமல், சுற்று வட்டாரங்களிலும் புகழ் அடைந்தது. இப்பாடலின் வார்த்தைகளை “Happy Birthday to You” என்று மாற்றியமைத்தது யார் என்பது தெரியவில்லை. இப்புதிய வார்த்தைகளுடன் இப்பாடலை 1924ம் ஆண்டு Robert Coleman என்பவர் ஒரு புத்தகத்தில் வெளியிட்டார். அன்று முதல் இன்றுவரை, “Happy Birthday” பாடல் உலகின் அனைத்து நாடுகளிலும் ஒலிக்கத் துவங்கியது. 1998ம் ஆண்டு வெளியிடப்பட்ட கின்னஸ் உலகச் சாதனைகள் பட்டியலில் “Happy Birthday” பாடல்தான் உலகெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் பாடலென்ற சாதனையைப் படைத்தது.
எப்போதெல்லாம், “Happy Birthday” பாடல் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம், இப்பாடலை முதலில் இயற்றிய Mildred, Patty சகோதரிகளின் Hill குடும்பத்திற்கு ‘royalty’ அல்லது ‘copyright’ என்று சொல்லப்படும் ஒரு தொகை வழங்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.