இந்தியாவில் சிறார் பாலியல் தொழிலிலும் மனித வியாபாரத்திலும் கட்டாயமாகப் பயன்படுத்தப்படுகின்றனர்
சன.08,2013. இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான
சிறார் காணாமல்போகின்றனர், இவர்கள் பாலியல் தொழிலிலும், சட்டத்துக்கு விரோதமாகவும் வேலை
செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. 2011ம் ஆண்டில்
காணாமல்போயுள்ள 32,342 சிறாரில், குறைந்தது 11,228 சிறார் மேற்கு வங்காளத்தில் காணாமல்போயுள்ளனர்,
இதற்கு ஏழ்மையே காரணம் என்றும் சொல்லப்படுகின்றது. 18 வயதுக்குட்பட்ட சிறார் பாலியல்
தொழிலில் ஒரு மாதத்தில் 80,000 ரூபாய்வரை சம்பாதிக்கின்றனர் என்றும் அந்த ஊடகச் செய்தி
கூறுகிறது.