2013-01-03 14:18:01

நேர்காணல் – இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்


சன.03,2013. திருமதி வெண்ணிலா அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கணித ஆசிரியராகப் பணிசெய்து வருகிறார். இவர் ஒரு பெண்ணுரிமை எழுத்தாளர் மற்றும் கவிஞர். பெண்கள், சிறுவயது முதற்கொண்டு எதிர்கொள்ளும் பாலியல் மற்றும்பிற வன்கொடுமைகள் சார்ந்த கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சிறுகதைகளை இவர் எழுதி வருகிறார். இவர் எழுதிய சிறுகதையும் கவிதையும் ஆனந்த விகடனில் பிரசுரமாகி இருக்கிறது. கடந்த டிசம்பர் 16ம் தேதி டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, 13 நாள்களுக்குப் பின்னர் இறந்தார். இந்த நிகழ்வு தொடர்பாக டில்லி காவல்துறை ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஒன்றையும் தயாரித்துள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை, ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையே உறையவைத்துள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படுமாறு ஒவ்வொரு நாளும் டெல்லியில் ஊர்வலங்கள் இடம்பெற்று வருகின்றன. இப்புதனன்று நடைபெற்ற பெண்கள் ஊர்வலத்தில் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் உட்பட பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக எழுத்தாளர் வெண்ணிலா அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.