2013-01-02 15:45:49

வியட்நாமில், 14 கத்தோலிக்கர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்


சன.02,2013. வியட்நாமில், அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக இணையத்தளத்தில் கருத்துக்களை வெளியிட்ட 14 கத்தோலிக்கர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
வியட்நாம் அரசு சட்டத்தின் 79வது பிரிவின்படி, அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 கத்தோலிக்கர்கள் இம்மாதம் 6ம் தேதி நடைபெற விருக்கும் விசாரணையின் இறுதியில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
அரசின் நடவடிக்கைகள் மிகுந்த துயரத்தையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது என்று வியட்நாம் ஆயர் பேரவையின் நீதி, அமைதிப் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை Le Quoc Thang கூறினார்.
வியட்நாமில், 2012ம் ஆண்டு இணையதளத்தின் மூலம் கருத்துக்களைப் பரிமாறி வந்த 40க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.