2013-01-02 15:48:01

2012ம் ஆண்டில் மதம் சார்ந்த செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றன


சன.02,2013. 2012ம் ஆண்டில் மதம் சார்ந்த செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் நிறைவடையும் வேளையில், அவ்வாண்டைப் பின்னோக்கிப் பார்ப்பது ஊடகங்களின் வழக்கம். 2012ம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்த்த அமெரிக்க ஊடகங்கள், அந்நாட்டில் மதம் சார்ந்த விவாதங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன என்று கூறியுள்ளன.
பிள்ளைப் பேறு, கருக்கலைப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய சட்டவரைவுகள் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது இடம்பெற்ற செய்திகள் முதன்மை இடத்தில் உள்ளன.
இவ்வாண்டு நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலிலும் மதம் ஒரு முக்கிய இடம்பெற்றது என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
அமெரிக்காவில், 1990ம் ஆண்டு 6 விழுக்காடு மக்கள் மத நம்பிக்கை கொண்டிருந்தனர் என்றும், இவ்வெண்ணிக்கை தற்போது 19 விழுக்காடாக உயர்ந்திருப்பதும் ஒரு முக்கிய செய்தியாக இவ்வாண்டில் இடம்பெற்றது.








All the contents on this site are copyrighted ©.