2012-12-27 15:19:58

சுவிட்சர்லாந்தில் கிறிஸ்மஸ்: வாழ்த்துகளை விட பரிசுகள் அனுப்பியோரே அதிகம்


டிச.27,2012. சுவிட்சர்லாந்தில் இவ்வாண்டு கிறிஸ்துமஸ் விழாவுக்கு, வாழ்த்துகளை விட பரிசுகளே அதிகம் அனுப்பப்பட்டதாக Swiss.com தகவல் வெளியிட்டிருக்கிறது.
இவ்வாண்டு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, சுவிஸ் தபால்துறை டிசம்பர் 1ம் தேதி முதல் 24ம் தேதி வரை 1 கோடியே, 60 இலட்சம் பரிசுப்பொருட்களை அனுப்பியுள்ளது கடந்த வருடம் வரை இந்த எண்ணிக்கை 1 கோடியே, 50 இலட்சமாக இருந்தது.
கிறிஸ்துமஸ் அன்று 2 கோடியே, 44 இலட்சம் வாழ்த்துச் செய்திகள் அனுப்பப்பட்டதாக Swiss.comமின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த ஆண்டில் கிறிஸ்துமஸ் முன்னிரவு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று கடந்த ஆண்டைவிட குறைவான குறுந்தகவல்களே அனுப்பப்பட்டதாக Swiss.com தெரிவித்தது.
சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பலரும் வாழ்த்துகளை அனுப்பியதனால் அலைபேசிகளில் வாழ்த்துகள் அனுப்புவது குறைந்துபோனது என்று Swiss.comமின் தகவல் தொடர்பாளர் Jeff Huber கூறினார்.








All the contents on this site are copyrighted ©.