2012-12-26 14:45:17

Secunderabad நகரில் அமைந்துள்ள புனித மரியா பேராலயம், பசிலிக்கா என்று திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ளது


டிச.26,2012. வரலாற்றுச் சிறப்புமிக்க புனித மரியா பேராலயம், பசிலிக்கா என்று திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டிருப்பது ஆந்திர திருஅவைக்குக் கிடைக்கப்பெற்றுள்ள பெரும் வரம் என்று ஹைதராபாத் பேராயர் தும்மா பாலா கூறினார்.
ஆந்திர மாநிலத்தில், Secunderabad நகரில் அமைந்துள்ள புனித மரியா பேராலயம் 150 ஆண்டுகள் வரலாற்றுப் புகழ் பெற்றது. 1850களில் அங்கு பணியாற்றிய பிரித்தானியப் படைவீரர்களுக்கென அருள்தந்தை Daniel Murphy என்பவரால் இக்கோவில் எழுப்பப்பட்டது.
அண்மையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, இப்பேராலயம் பசிலிக்கா என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையின்படி, இக்கோவில் சிறப்புமிக்க திருத்தலமாக உயர்த்தப்படுவதுடன், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறப்பான ஆசீர் பெற்றுச் செல்வர் என்பதும் கத்தோலிக்கத் திருமறையின் ஒரு பாரம்பரியம்.








All the contents on this site are copyrighted ©.