2012-12-22 15:44:42

சிரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் போரை எதிர்க்கின்றனர்


டிச.22,2012. சிரியாவில் குண்டு வெடிப்புகளும் காழ்ப்புணர்வுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற போதிலும், அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி கூறினார்.
இளம் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் 6,500க்கு மேற்பட்ட சூடான உணவுப் பொட்டலங்களை இனம், மதம் என்ற வேறுபாடின்றி, தமஸ்கு நகரிலுள்ள ஏழைகளுக்கு வழங்கி வருகின்றனர் என்றும் பேராயர் செனாரி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
கிறிஸ்மஸின் மகிழ்ச்சி, சண்டை மற்றும் பயம் நிறைந்த சூழலில் கொண்டாடப்படுகின்றது என்றுரைத்த பேராயர், தற்போது மக்களின் இதயங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் துன்பங்களுக்கும் வெறுப்புக்கும் சவாலாக இந்தக் கிறிஸ்மஸ் மகிழ்ச்சி இருக்கின்றது என்று கூறினார்.
இந்தக் கடினமானச் சண்டைச் சூழலில், பிறரன்பும் பகிர்வுமே வெறுப்பையும் கோபத்தையும் மேற்கொள்ளும் உண்மையான ஆயுதங்களாக மக்களுக்கு இருக்கின்றன என்று கூறிய சிரியாவுக்கானத் திருப்பீடத் தூதர், சிரியாவில் அமைதியும் ஒப்புரவும் ஏற்பட செபிக்குமாறு விண்ணப்பித்துள்ளார்.
சிரியாவில் இடம்பெறும் சண்டையினால் பத்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் அகதிகளாகியுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.