2012-12-20 15:40:48

இத்தாலியின் Rai தொலைக்காட்சி நிறுவனம் நாசரேத்தூர் இயேசு என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை ஒளிப்பரப்பியது


டிச.20,2012. நெருங்கி வரும் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு, இவ்வியாழன் இரவு இத்தாலியின் Rai தொலைக்காட்சி நிறுவனம் நாசரேத்தூர் இயேசு என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை ஒளிப்பரப்பியது.
கிறிஸ்துவின் வாழ்வில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் ஆய்வுகளின் அடிப்படையில் Maite Carpio என்பவர் உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம், வத்திக்கானில் பாதுகாக்கப்பட்டுவரும் பல பழமைவாய்ந்த ஏடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படத்தின் மூன்றாவது பகுதியில் விவிலிய அறிஞர்கள் சிலரது பேட்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பீட கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இயேசு சபை அருள்தந்தை Francesco De Rossi Gasperis உட்பட பல அறிஞர்களின் பேட்டிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.








All the contents on this site are copyrighted ©.