2012-12-18 15:23:27

மெக்சிகோ கர்தினால் : குடியேற்றதாரர்கள் போதைப்பொருள்களை எடுத்துச் செல்லக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்


டிச.18,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் செல்லும் மத்திய அமெரிக்க நாடுகளின் மக்கள் போதைப்பொருள்களை எடுத்துச் செல்லக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று மெக்சிகோ கர்தினால் Juan Sandoval Iniguez கூறினார்.
போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள்களை வியாபாரம் செய்வதற்கு குடியேற்றதாரர்களைப் பயன்படுத்தும் புதிய யுக்திகளைக் கையில் எடுத்துள்ளார்கள் என்று எச்சரித்த Guadalajaraவின் முன்னாள் பேராயர் கர்தினால் Sandoval Iniguez, இவ்வாறு செய்வதற்கு மறுக்கும் குடியேற்றதாரர்கள் கொலை மிரட்டலை எதிர்நோக்குகின்றார்கள் என்றும் கூறினார்.
அண்மையில் வட மெக்சிகோவில் அறுபதுக்கும் மேற்பட்ட குடியேற்றதாரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறிய கர்தினால் Sandoval Iniguez, மத்திய அமெரிக்க நாடுகளின் குடியேற்றதாரர்கள், மெக்சிகோ நாட்டுக் குடியேற்றதாரர் அலுவலக அதிகாரிகளால் கொடூரமாய் நடத்தப்படுகிறார்கள் என்றும் குறை கூறினார்.
இந்த அதிகாரிகள், குடியேற்றதாரப் பெண்களைச் சில நேரங்களில் பாலியல் வன்செயலுக்கு உள்ளாக்குகின்றனர் மற்றும் ஆதரவற்ற குடியேற்றதாரர்களிடமிருந்து பணத்தையும் பொருள்களையும் அபகரிக்கின்றனர் என்றும் மெக்சிகோ கர்தினால் Sandoval Iniguez குற்றம் சாட்டினார்







All the contents on this site are copyrighted ©.