2012-12-14 15:49:49

இந்தியர்களுக்கு ஆயுள் அதிகம்; ஆரோக்கியம் குறைவு:ஆய்வில் தகவல்


டிச.14,2012. இந்தியர்கள் நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்றும், வயதான காலத்தில், மோசமான உடல்நிலையால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சராசரியாக இந்தியாவில் ஆண்கள் 63 வயதுவரையிலும், பெண்கள் 67.5 வயது வரையிலும் வாழ்வதாகவும், இதில் ஆண்கள் 54.6 வயது வரை உடல்நிலை நல்ல ஆரோக்யமாக இருப்பதாகவும் பெண்கள் 57.1 வயது வரை ஆரோக்யமாக வாழ்வதாகவும், பிரிட்டனை சேர்ந்த பிரபல மருத்துவ இதழான லான்செட் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
1970ல் இருந்து 2010ம் ஆண்டு வரை பிறந்தவர்களின் ஆயுள் காலத்தை கணக்கிடுகையில் சராசரியாக ஆண்களின் ஆயுள் 15 வருடங்களும், பெண்களின் ஆயுள் 18 வருடங்களும் அதிகரித்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு உயர் இரத்தஅழுத்த நோய் ஏற்படுவதாகவும், இந்தியர்களின் உணவில் உள்ள குறைந்த பழங்கள், இரத்தத்தில் அதிகப்படியான குளூக்கோஸ் அளவு, மதுபான பயன்பாடு, இரும்புச்சத்து குறைபாடு, தாய்ப்பாலுக்கு மாற்றான உணவு, குறைந்த உடற்பயிற்சி, புகையிலை பயன்படுத்துதல், புகைபிடித்தல் உள்ளிட்டவைகளே அவர்களின் குறைந்த ஆரோக்கியத்திற்கு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.