2012-12-14 15:51:11

Ivory Coast நாட்டின் திருப்பீடத் தூதர் பேராயர் Ambrose Madthaவின் உடல் சனிக்கிழமை நல்லடக்கம்


டிச.14,2012. மறைந்த பேராயர் Ambrose Madthaவின் வாழ்வு நம்பிக்கை ஆண்டில் நம்மை இன்னும் ஆழமான கிறிஸ்துவ விசுவாசத்திற்கு அழைப்பு விடுக்கிறது என்று மங்களூரு பேராயர் Aloysius Paul D'Souza கூறினார்.
டிசம்பர் 8, கடந்த சனிக்கிழமையன்று ஒரு வாகன விபத்தில் இறந்த Ivory Coast நாட்டின் திருப்பீடத் தூதர் பேராயர் Madthaவின் உடல் இவ்வெள்ளியன்று காலை இந்தியாவை அடைந்தது. பேராயரின் அடக்கச் சடங்குகள் இச்சனிக்கிழமை அவர் பிறந்த இடமான Belthangadyல் உள்ள புனித மீட்பர் ஆலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Ivory Coast நாட்டின் அரசுத் தலைவர் தனிப்பட்ட வகையில் ஏற்பாடு செய்திருந்த விமானத்தில், பேராயர் Madthaவின் உடல் கொண்டுவரப்பட்டது என்றும், அந்நாட்டின் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Alexis Touabli Youlo, Abidjan உயர்மறைமாவட்டப் பேராயர் Jean-Pierre Kutwa, வெளியுறவுத் துறை அமைச்சர் Charles Koffi Diby ஆகியோர் பேராயர் Madthaவின் அடக்கச் சடங்கில் கலந்து கொள்வர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
1955ம் ஆண்டு கர்நாடகாவின் Belthangady என்ற ஊரில் பிறந்த Ambrose Madtha, உரோம் நகரில், திருஅவைச் சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்று, 2008ம் ஆண்டு Ivory Coast நாட்டின் திருப்பீடத் தூதராகப் பொறுப்பேற்றார். 2010ம் ஆண்டு அந்நாட்டில் உருவான போராட்டச் சூழலின்போது, நாட்டில் அமைதியைக் கொணர்வதற்கு பேராயர் பெரிதும் உழைத்தார்.








All the contents on this site are copyrighted ©.