2012-12-13 16:02:58

காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களைத் தாக்கும்படி மக்களைத் தூண்டிவிடுவது, எகிப்தில் நடைபெறும் போராட்டங்களைத் திசைதிருப்பும் ஒரு முயற்சி - ஆயர் Hanna


டிச.13,2012. எகிப்தில் நடைபெறும் போராட்டங்களைத் திசைதிருப்பும் ஒரு முயற்சியாக காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களைத் தாக்கும்படி மக்கள் தூண்டிவிடப்படுகிறார்கள் என்று அலேக்சாந்திரியாவின் துணை ஆயர் Botros Fahim Awad Hanna கூறினார்.
நாட்டில் நடைபெறும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோரில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்கள் என்ற தவறான செய்தியை, அரசுத் தலைவர் Morsiக்கு ஆதரவு தெரிவிக்கும் Muslim Brotherhoodன் தலைவர் Mahmoud Beltagui வெளியிட்டு, வன்முறையைத் தூண்டி வருகிறார் என்று ஆயர் Hanna, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
எகிப்தில் பொறுப்பேற்றிருக்கும் Morsi தலைமையிலான அரசு, இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்களை உள்ளடக்கிய சட்டங்களை நாட்டில் கொணர முயல்வதைத் தடுக்கும் வகையில் தற்போதைய போராட்டங்கள் நடைபெறுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய ஆயர் Hanna, இக்கசப்பான உண்மையை மறைக்க, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு முயற்சியாக கத்தோலிக்கர்களை பகடைக் காய்களாக்குகின்றனர் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.