2012-12-11 15:13:11

லெபனன் மக்கள் பேச்சுவார்த்தைகளை நோக்கி உழைக்க ஆயர்கள் அழைப்பு


டிச. 11, 2012. லெபனன் நாட்டு மக்கள் அனைவரும் வன்முறைகளையும் போரையும் கைவிட்டு, பேச்சுவார்த்தைகளை வளர்க்க உழைக்கவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள்.
சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டுப்போர்களால் லெபனனின் அமைதி, பாதுகாப்பு, ஒன்றிப்பு ஆகியவைகளுடன் பொருளாதாரம், வியாபாரம், சுற்றுலா ஆகியவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக உரைக்கும் லெபனன் ஆயர்கள், நீதிக்காகவும் மாண்புக்காகவும் விடுதலைக்காகவும் போராடும் மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வை தெரிவிக்கும் அதேவேளை, வன்முறைகளையும் போரையும் கைவிடவேண்டும் என லெபனன் மக்களிடம் விண்ணப்பித்துள்ளனர்.
பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், குடும்பங்கள் என அனைத்து இடங்களிலும் கலந்துரையாடல் கலாச்சாரம் ஆழப்படுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் மக்களுக்கு முன்வைத்துள்ளனர் லெபனன் ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.