2012-12-11 15:13:47

புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் மக்களிடையே அவசரகாலப்பணிகளைத் துவக்கியுள்ளது காரித்தாஸ் அமைப்பு.


டிச. 11, 2012. நூற்றுக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமான புயலால் பாதிக்கப்பட்ட பிலிபீன்ஸ் மக்களிடையே அவசரகாலப்பணிகளைத் துவக்கியுள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
ஒரு இலட்சத்து அறுபது ஆயிரம் பேர் தங்கள் சொந்த இடங்களை விட்டு குடிபெயரவேண்டியுள்ள நிலையில், அவர்களுக்கான படுக்கை விரிப்புகள், குடிநீர், தற்காலிகத் தங்குமிடங்கள் ஆகியவைகளை வழங்கி உதவிப்பணிகளை ஆற்றி வருகின்றது காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு.
கோவில்களிலும், திருஅவை நடத்தும் கல்விக்கூடங்களிலும் இம்மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பு, அரிசி போன்ற அன்றாட உணவுப்பொருட்களை வழங்குகின்றபோதிலும் இம்மக்களுக்கான நீண்டகாலத் தேவைகளை நிறைவேற்ற திட்டமிட்டு செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தது.








All the contents on this site are copyrighted ©.