2012-12-10 15:57:40

மனித உரிமைகள் குறித்த இந்திய ஆயர் பேரவையின் அறிக்கை


டிச.10,2012. இந்தியாவில் மனித உரிமை நிலை மிகுந்த கவலை தருவதாக உள்ளதாக, மனித உரிமை மீறல்கள் குறித்த புள்ளிவிவரங்களுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்தியத் திருஅவை.
இத்திங்களன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட இந்திய ஆயர்கள் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி அவை, அணுமின் நிலையங்களுக்கு எதிராக வன்முறையற்ற வழிகளில் போராடும் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது குறித்து கவலையைத் தெரிவித்துள்ளது.
பட்டினியால் மரணங்கள், 43 நிமிடத்திற்கு ஒரு விவசாயியின் தற்கொலை, நலஆதரவு திட்டமிட்டு புறக்கணிக்கப்படல், குழந்தைகள் கைவிடப்படல், மக்கள் காணாமல்போதல், சிறையில் சித்ரவதை, பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள், தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், மதச்சிறுபான்மையினர் சித்ரவதைப்படுத்தப்படல் போன்றவைகளை எடுத்துரைத்து, அவைகள் குறித்த புள்ளிவிவரங்களையும் தந்துள்ளது இந்தியத் திரு அவை.








All the contents on this site are copyrighted ©.