2012-12-10 16:06:23

உற்பத்தித் துறையில் மாற்றுத் திறனாளிகளை இணைத்துக்கொள்வது வருங்காலத்திற்கு முக்கியம்


டிச.10,2012. சமூகத்திலும், அதன் உற்பத்தித் துறையிலும் மாற்றுத் திறனாளிகளை இணைத்துக் கொள்வது வருங்காலத்திற்கு முக்கியமான ஒரு கூறாகும் என்று பாகிஸ்தான் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ நடவடிக்கையாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
"சமூகத்தில் அனைவரும் இணைவதற்கு தடையாய் இருப்பவைகளை அகற்றல்" என்ற தலைப்பில் பாகிஸ்தான் Faisalabad ல் இடம்பெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு, பிறரன்பும், புரிந்துகொள்ளுதலும் மட்டும் போதாது, அவர்கள் மீது நம்பிக்கை வைக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்று அரசுக்கு அழைப்பு விடுத்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கும் முழு உரிமைகள் வழங்கும் வகையில், புதியச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நடவடிக்கையாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.