2012-12-06 15:40:24

டிச.07, திருவருகைக்காலச் சிந்தனை – வழங்குபவர் அருள்திரு இயேசு கருணா


RealAudioMP3 “ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார். ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும். அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலொசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என அழைக்கப்படும்.” (எசாயா 9:6).விஞ்ஞானி ஒருவர் தவளை ஒன்றை தன் ஆய்வுக் கூடத்தில் வைத்து ஆராய்ச்சி செய்கின்றார். ஒரு கத்தியை கையில் பிடித்துக்கொண்டு அதன் அருகில் வருகின்றார். முதல் காலை வெட்டிவிட்டு, ‘போ’ என்கிறார். அது மெதுவாக மூன்று கால்களோடு நடக்கிறது. அதன் இரண்டாவது காலையும் வெட்டிவிட்டு ‘போ’ என்கிறார், கொஞ்சம் சிரமப்பட்டு போகின்றது. மூன்றாவது காலை வெட்டிவிட்டு ‘போ’ என்கிறார். உயிருக்குப் பயந்து தன் ஒற்றைக்காலை இழுத்துக்கொண்டு ஊர்ந்து செல்ல முற்படுகிறது. தவளையின் நான்காம் காலையும் வெட்டிவிட்டு ‘போ’ என்கிறார். தவளை அதே இடத்தில் இரத்தம் சொட்டச் சொட்ட நிற்கின்றது. இன்னும் சத்தமாக ‘போ’ என்கிறார். ஆய்வகமே அதிரும் அளவுக்கு ‘போ’ என்கிறார். தவளை நகலவே இல்லை. தன் ஆய்வுத்தாளை எடுத்து இப்படி எழுதத் தொடங்குகின்றார்: ‘தவளையின் நான்காம் காலை வெட்டினால் அதற்குக் காது கேட்காது’. குசழப என்ற இந்த ஆவணப்படம் நம் வாழ்வின் எதார்த்தைக் காட்டுகிறது. நாம் பார்ப்பது ஒன்று. ஆனால் புரிந்துகொள்வது வேறொன்று. நாம் படிக்கின்ற படிப்புää சம்பாதிக்கின்ற பணம், முடிக்கின்ற திருமணம், எடுக்கின்ற நிலைப்பாடு, மேற்கொள்கின்ற பயணம் என அனைத்திற்கும் நோக்கமாக இருப்பது இந்த மூன்று எழுத்துக்கள்தாம்: ‘அமைதி’. ‘இது அமைதியோ’, அல்லது ‘அது அமைதியோ’ என்று அதிகமாக நாம் தவறாக புரிந்து கொள்வதும் இதைப்பற்றித்தான். ‘இங்கே கிடைக்குமோ?’ ‘அங்கே கிடைக்குமோ?’ என்று நாம் அங்கலாய்ப்புடன் தேடுவதும் இதைத்தான். அடுத்தவர்கள் எளிதாக நம்மிடமிருந்து பறித்துவிடுவதும் இதைத்தான். அமைதிக்கான முதல் வழி: ;இன்றில் வாழ்வது’ ‘நிகழ்காலத்தில் வாழ்வது’. கடந்த காலத்தின் பாடத்தைக் கற்றுக்கொண்டு எதிர்காலத்திற்கான தயாரிப்போடு நிகழ்காலத்தில் வாழ்பவரால்தாம் அமைதியை அடைய முடியும். இரண்டாவதாகää ஒப்பீடுகளைக் களைவது. ஒன்றை மற்றொன்றோடும், நம்மை மற்றவர்களோடும்ää இருப்பவற்றை இல்லாதவற்றையோடும் ஒப்பிடும்போதும் நாம் நமது அமைதியை இழந்துவிடுகின்றோம். ஒரு ஆற்றின் அக்கரைக்கு மூன்றுபேர் மது அருந்தச் செல்கின்றனர். மது அருந்திவிட்டு இக்கரைக்குக் கடந்து வர பரிசலில் ஏறி துடுப்புப் போடுகின்றனர். விடிந்துவிட்டது. அப்போதும் அதே கரையில்தான் பரிசல் நிற்கின்றது. மது மயக்கத்தில் பரிசல் கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்க மறந்தனர். நம் வாழ்விலும் நம்மைக் கட்டியிருக்கும் கடந்தகால, எதிர்கால மற்றும் ஒப்பீடு என்னும் கயிற்றை நம் அரைத்தூக்க வாழ்வில் அவிழ்க்க மறந்துவிட்டு எவ்வளவு துடுப்பு போட்டாலும் அமைதி நமக்கு எட்டாக் கரையாகவே இருக்கும்.







All the contents on this site are copyrighted ©.