2012-12-04 15:05:21

பொய்க்குற்றச்சாட்டில் பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டகிறிஸ்தவ இளைஞர் மரணம்


டிச.04,2012. குரானை எரித்தார் என்ற பொய்க்குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணை எதுவுமின்றி சிறையிலடைக்கப்பட்ட 22 வயது கிறிஸ்தவ இளைஞர் ஒருவர் பாகிஸ்தான் சிறையிலேயே உயிரிழந்துள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்ட இந்த இளைஞர் பொய்க்குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டதைத்தொடர்ந்து, சிறைக்குள்ளேயே மனநிலை மேலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது காவல்துறையால் கொடுமைப்படுத்தப்பட்டதால் இறந்தாரா என தலத்திருஅவைத் தலைவர்களும் மனித் உரிமை அமைப்புகளும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
Nadeem Masih என்ற இளைஞர் குரானை எரித்தார் என சில இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு ஒரு வாரம் எந்த வித விசாரணையும் இன்றி காவலில் வைக்கப்பட்டர். அவர்மீதான குற்றங்களை நிருப்பிக்க குற்றம் சுமத்தியோர் முன்வராத நிலையில், இம்மாதம் முதல்தேதி இரவு சிறையில் திடீரென நோய்வாய்ப்பட்டு அவ்விளைஞர் இறந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது.
இவ்விளைஞரின் மரணம் குறித்து முழுவிசாரணைகள் இடம்பெறவேண்டும் என பாகிஸ்தான் கத்தோலிக்க குருக்களும் மனிதஉரிமை ஆர்வலர்களும் அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை முன்வைத்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.