2012-12-04 15:00:47

கொலம்பியா இளையோர் கருக்கலைத்தலுக்கும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கும் எதிர்ப்ப்பு


டிச.04,2012. கொலம்பியா நாட்டின் பெரும்பான்மை இளையோர், கருக்கலைத்தல், ஒரே பாலினத் திருமணம், போதைப் பொருட்களை சட்டபூர்வமாக அங்கீகரித்தல் போன்றவைகளை எதிர்ப்பதாக அண்மை ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
Ipsos Napoleon Franco என்ற ஆய்வு நிறுவனம் 18 முதல் 34 வயது வரை உடையவரிடையே நடத்திய ஆய்வில் பெரும்பான்மையினர் கருக்கலைத்தலையையும் போதைப்பொருள் பயன்பாட்டையும், ஒரே பாலினத்திருமணங்களையும் எதிர்ப்பதாகத் தெரியவந்துள்ளது.
கொலம்பியாவின் 13 நகரங்களைச் சேர்ந்த 1006 இளைஞர்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.