2012-12-01 14:48:50

ஆப்ரிக்காவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 35 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு ஐ.நா. உதவி


டிச.01,2012. தெற்கு ஆப்ரிக்காவில், குறிப்பாக, மலாவி, ஜிம்பாபுவே, லெசோத்தோ ஆகிய நாடுகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 35 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு ஐ.நா.வின் உணவு திட்ட அமைப்பு முயற்சித்து வருகிறது.
பெருமளவான குறுநில விவசாயிகளும் அவர்களது குடும்பங்களும் அண்மை ஆண்டுகளில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளன என்று WFP என்ற உலக உணவு திட்ட அமைப்பின் தெற்கு ஆப்ரிக்க அதிகாரி Brenda Barton கூறினார்.
அரசுகள், நன்கொடையாளர்கள், மாநில நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியைக் கொண்டு இதனைச் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் சோளத்தின் விலை, லெசோத்தோவில் 60 விழுக்காடும், மலாவியில் ஏறக்குறைய 80 விழுக்காடும் அதிகரித்துள்ளன என்றும் Barton கூறினார்.







All the contents on this site are copyrighted ©.