2012-11-30 15:34:50

பெண்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்கள் மீது உண்மையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்


நவ.30,2012. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு ஒரு வழியாக, அவர்களை வன்முறைக்கு உள்ளாக்கும் மனிதருக்குரிய தண்டனைகளைப் பொதுப்படையாக அறிவிக்க வேண்டுமென பாகிஸ்தான் மனித உரிமைகள் குழு ஒன்று கூறியது.
பாகிஸ்தானில் காவல்நிலையங்களில் இடம்பெறும் ஊழல் கலாச்சாரம், சட்டமும் ஒழுங்கும் மீறப்படுவது, நீதிமன்ற வழக்குகள் இழுத்தடிக்கப்படல் ஆகியவை ஆணாதிக்க சமுதாயத்தில் சட்டத்தினால் கிடைக்கும் தண்டனைகள் மீது பயத்தை நீக்குகின்றன என்று அக்குழு கூறியது.
பாகிஸ்தானில் கடத்தல் குற்றமே பெண்களுக்கு எதிராகப் பரவலாக இடம்பெறும் குற்றம் என்றுரைக்கும் Aurat மனித உரிமைகள் அமைப்பு, இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் 1,086 கடத்தல் குற்றங்களும், 792 கொலைகளும் இடம்பெற்றுள்ளன என்று கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.